Tuesday, September 14, 2010

For PIT Contest September 2010






11 comments:

துளசி கோபால் said...

நாலாவது படம்தான் என் ச்சாய்ஸ்.

ஆமாம்...வளர்ந்த கொம்பன் ஏன் இப்படி ஒல்லியான காலோடு இருக்கான்?

கேமெரா ஆங்கிள் இப்படி காமிக்குதா?

M.Rishan Shareef said...

வாங்க டீச்சர் :-)

காலோடு சேர்த்து ஆளும் கொஞ்சம் ஒல்லியாகத்தான் தெரிந்தார்.. ஒரு வேளை உணவுப் பற்றாக்குறையாக இருக்குமோ?

இவர் பரம்பரையே எங்கள் வீட்டுக்கருகில் வளருது டீச்சர்.. இவரது அம்மா இவரை ஈன்ற இடத்திலேயே இவர் வளர்ந்துவருகிறார் இப்பொழுது..அம்மா இல்லை.. :-(

கொம்பன் என்பதால் மூர்க்கமோ என்னமோ, பாகனைத் தவிர எவரையும் பக்கத்தில் வரவிடுவதில்லை..எப்பொழுதும் தலையை வேறு ஆட்டியபடியே இருக்கும். அது என்னை நேராகப் பார்த்த ஒரு கணம் வாய்த்தது..உடனே க்ளிக்கி விட்டேன்.. :-)

கருத்துக்கு நன்றி டீச்சர்!

துளசி கோபால் said...

பாவம்ப்பா. யானைக்கு உணவு பற்றாக்குறைன்னாவே மனசு நோகுது:(

M.Rishan Shareef said...

ஆமாம் டீச்சர்..பச்சைத் தென்னோலையை மட்டும் வெட்டிக் கொண்டு வந்துபோட்டிருந்தார்கள். :-(

திருவிழா நாட்களில் மட்டும் விழுந்து விழுந்து கவனிக்கப்படும் அதனை மற்ற நாட்களில் யாருமே கவனிப்பதில்லை :-(

ம.தி.சுதா said...

படங்கள் ரம்மியமாக இருக்கிறது.... அதுவும் இந்த முயல் குட்டி இன்னும் அழகு...
என் ஓடையில் நனைவதானால் என்மேல் சொடுக்கவும்

M.Rishan Shareef said...

அன்பின் ம.தி சுதா,

//படங்கள் ரம்மியமாக இருக்கிறது.... அதுவும் இந்த முயல் குட்டி இன்னும் அழகு...//

:-)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..
யாழ்தேவி நட்சத்திர வாழ்த்துக்கள் :-)

ம.தி.சுதா said...

ஃஃஃ...யாழ்தேவி நட்சத்திர வாழ்த்துக்கள் :-)...ஃஃஃ நன்றி சகோதரா...

ராமலக்ஷ்மி said...

முதல் படம் அட்டகாசம். ஆனால் பின்னணி வருத்தம் தருகிறது. முயல்கள் யாவும் அழகு. நாலாவது துல்லியம். முயலின் மென்மை மிளிர்கிறது. வெற்றிக்கு வாழ்த்துக்கள்!!!

M.Rishan Shareef said...

அன்பின் ராமலக்ஷ்மி,

//முதல் படம் அட்டகாசம். ஆனால் பின்னணி வருத்தம் தருகிறது. முயல்கள் யாவும் அழகு. நாலாவது துல்லியம். முயலின் மென்மை மிளிர்கிறது. வெற்றிக்கு வாழ்த்துக்கள்!!!//

முயலை இலகுவாகப் படம் பிடிக்க முடிந்தது சகோதரி..அது சாதுவான பிராணி..அமைதியாக இருந்தது.

ஆனால் இங்குள்ள முதல் படம் பிடிக்கச் சிரமப்பட வேண்டியிருந்தது. யானை அருகில் செல்லவே விடவில்லை. தலையை ஆட்டி ஆட்டி அச்சுருத்திக் கொண்டிருந்தது. ஒரே ஒரு கணம் தலை ஆட்டுவதை நிறுத்தி நேராக என்னைப் பார்த்தது..அக் கணத்தை உடனே பதிவு செய்தேன்.

ஆகவேதான் அதனைக் கொடுத்தேன்.

இம் மாதப் போட்டியில் கலந்துகொள்ள ஆர்வமிருந்தும் நேரம் வாய்க்கவேயில்லை (பெருநாள் சமயம் என்பதால்). ஒவ்வொரு மாதமும் தவறாமல் போட்டியில் கலந்துகொள்ளச் சொன்ன உங்கள் ஊக்கம் தரும் வரிகள் நினைவில் வந்து நேற்று உடனே போய் போட்டிக்காக இப்படங்களை எடுத்தேன்.

வருகைக்கும் ஊக்கம்தரும் கருத்துக்களுக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :-)

ராமலக்ஷ்மி said...

நல்லது ரிஷான். திறமையிருந்தும் பல காலமாக நீங்கள் பிட் பக்கமே வரவில்லை. கடந்த முறை கிடைத்த வெற்றி எப்போதும் தொடரவும் வாழ்த்துக்கள்.

இம்மாத எனது பிட் பதிவிலும் யானைகளும், முயல்களும்:)!

மாதேவி said...

வாழ்த்துகள் ரிஷான்.